
கொல்கத்தா,
மேற்கு வங்காள மாநிலம், கொல்கத்தாவை சேர்ந்தவர் தலிம் பாசு (31). தபால் துறையில் பணிபுரியும் இவர், சர்வே பார்க் பகுதியில் உள்ள பிரபல வங்கிக்கு சென்று பொம்மைத் துப்பாக்கியைக் காட்டி வாடிக்கையாளர்கள் மற்றும் வங்கியாளர்களிடம் தங்களிடம் உள்ள அனைத்து பொருட்களையும் தன்னிடம் ஒப்படைக்குமாறு கூறியுள்ளார்.
தலிம் பாசு பொம்மை துப்பாக்கியை வைத்திருப்பதை உணர்ந்த வங்கி மேலாளரும், வாடிக்கையாளர்களும் அவரை பின்னால் இருந்து அடித்துள்ளனர். இதில் கீழே விழுந்த அவரை பிடித்து வைத்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் அடிப்படையில் வங்கிக்குச் சென்ற போலீசார், தலிம் பாசுவிடம் இருந்த பொம்மைத் துப்பாக்கி மற்றும் கத்தியை பறிமுதல் செய்து கைது செய்தனர். அதன் பின்னர், நடத்தப்பட்ட விசாரணையில், அந்த வங்கியின் வாடிக்கையாளராக இருக்கும் தலிம் பாசு, வீட்டு கடனுக்கு வட்டி கட்ட முடியாததால் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரிய வந்தது.