பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

1 week ago 1

சென்னை,

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

"அமைச்சர் பொன்முடி, ஒரு பொதுக்கூட்டத்தில் பெண்களை தரக்குறைவாக, அநாகரீகமாக, நாகூசும் வார்த்தைகளால் பேசி இருக்கிறார். இந்திய அரசமைப்பு சட்டத்தின் கீழ் பதவி ஏற்றுக்கொண்ட பொன்முடி, பெண்களை கேவலமாக பேசுவது என்பது முறையற்ற செயல். இது ஏற்புடையதல்ல.

பொன்முடியின் நாகரிகமற்ற பேச்சுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்படிப்பட்ட ஒருவரை அமைச்சர் பதவியில் வைத்துக் கொண்டிருப்பது பெண் இனத்திற்கு செய்யும் துரோகம். எனவே, பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து உடனடியாக நீக்க வேண்டிய தார்மீக பொறுப்பு முதல்-அமைச்சருக்கு உள்ளது."

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read Entire Article