பொத்தனூர் மாரியம்மன் கோவில் தேரோட்டம்

4 hours ago 2

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே உள்ள பொத்தனூர், தேவராயசமுத்திரத்தில் சுயம்பு வெள்ளக்கல் மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 13-ம் தேதி காப்பு கட்டப்பட்டு, கம்பம் நடுதலுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து 19-ம் தேதி வரை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. 20-ம் தேதி மறுக்காப்பு கட்டுதல் நடைபெற்றது. 21- ம் தேதி முதல் 26-ம் தேதி வரை வாகன சேவை நடைபெற்றது. சிம்ம வாகனம், அன்ன வாகனம், பூத வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் அம்மன் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

27-ம் தேதி வடிசோறு நிகழ்ச்சியும், இரவு அம்மன் வெட்டு குதிரையில் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. நேற்று செவ்வாய்க்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. திருத்தேரில் எழுந்தருளிய அம்மன், முக்கிய வீதிகள் வழியாக வீதி உலா வந்து அருள்பாலித்தார். இதில் பொத்தனூர், வேலூர், பாண்டமங்கலம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். 

Read Entire Article