சாத்தான்குளம்,டிச.13: பொத்தகாலன்விளை கிளை நூலகத்திற்கு 25 புத்தகங்களை சாஸ்தாவிநல்லூர் விவசாய நலச்சங்கச் செயலாளர் லூர்துமணி வழங்கினார். சாத்தான்குளம் அருகேயுள்ள பொத்தக்காலன்விளை அரசு கிளை நூலகத்திற்கு பல்வேறு தகவல்கள் அடங்கிய 25 புத்தகங்களை வாசகர் பயன்பாட்டிற்கு சாஸ்தாவிநல்லூர் விவசாயிகள் நலச்சங்கச் செயலாளர் லூர்து மணி, கிளை நூலகர் சுப்ரமணியனிடம் நேற்று வழங்கினார். அப்போது முன்னாள் கூட்டுறவு சங்க உறுப்பினர்இருதயராஜ், இயற்கை ஆர்வலர் அமல்ராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
The post பொத்தகாலன்விளை நூலகத்திற்கு புத்தகங்கள் வழங்கல் appeared first on Dinakaran.