பொதுமக்களுக்கு ஆவின் பால் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது: அமைச்சர் ராஜ கண்னப்பன் தகவல்

1 month ago 6

சென்னை: வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்காக அனைத்து துறைகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. வடகிழக்கு பருவமழை காலத்தில் பால் மற்றும் பால் பொருட்கள் எந்த வித தங்கு தடையின்றி கிடைப்பதற்கான நடவடிக்கையை ஆவின் நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

அதன்படி கன்னியாகுமரி முதல் சென்னை வரை உள்ள கடலோர மாவட்டங்களில் பால் மற்றும் பால் பொருட்கள் தங்குதடையின்றி கிடைக்க ஒவ்வொரு மாவட்ட பால் பண்ணையிலும் 1/2 கிலோ பால் பவுடர் 4000 பாக்கெட்டுகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம் 20 டன் பால் பவுடர் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

50,000 எண்ணிக்கையில் 1/2 லிட்டர் பால் (UHT) 90 நாட்கள் வரை கெடாமல் இருப்பு வைக்கக்கூடிய பால் சோழிங்கநல்லூர் பால் பண்ணையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாவும், சென்னை, தாம்பரம் மற்றும் ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட கீழ்கண்ட ஆவின் மண்டல அலுவலகங்களில் 9000 கிலோ பால்பவுடர் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆவடி, அண்ணாசாலை, டி.நகர், பூவிருந்தவல்லி, மாதவரம், விருகம்பாக்கம், நங்கநல்லூர், வேளச்சேரி, சோலிங்கநல்லூர், ஆகிய 9 பாலகத்தில் தலா 1000 கிலோ என்ற அடிப்படையில் 9,000 கிலோ பால்பவுடர் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

மேலும் 500 டன் கால்நடை தீவனம் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. 50 டன் தாது உப்பு கலவை இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக இந்த கனமழையை எதிர்கொள்வதற்காக பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளதாக ஆவின் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பொதுமக்களுக்கு ஆவின் பால் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது: அமைச்சர் ராஜ கண்னப்பன் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article