பொது அமைதி, மத நல்லிணக்கத்தை பாதிக்கும் எந்தப் போராட்டத்தையும் அனுமதிக்க முடியாது: ஐகோர்ட்

3 months ago 10

சென்னை: “திருப்பரங்குன்றம் மலை சம்பவத்தைக் கண்டித்து போராட்டம் நடத்துவதற்கு எந்த அவசியமும் இல்லை. அப்படி போராட்டம் நடத்தினால், அது பிற மதத்தினரை மீண்டும் தூண்டி பொது அமைதிக்கு அது பாதிப்பை ஏற்படுத்தும். பொது அமைதி மற்றும் மதநல்லிணக்கத்துக்கு பாதிப்பு ஏற்படக்கூடிய எந்தவொரு போராட்டத்துக்கும் காவல்துறை அனுமதி வழங்கக்கூடாது,” என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், பாரத் இந்து முன்னணி அமைப்பின் வடசென்னை மாவட்ட துணை தலைவர் எஸ். யுவராஜ் என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில், “மதுரை மாவட்டத்தில் இருக்க கூடிய திருப்பரங்குன்றம் மலை முருகப்பெருமானின் மலை. அதனை இஸ்லாமியர்கள் சொந்தம் கொண்டாடி வருகின்றனர். இதை எதிர்த்து திருப்பரங்குன்றம் மலையை காக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் சென்னை ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் இருந்து கந்தகோட்டம் முருகன் கோயில் வரை பிப்ரவரி 18-ம் தேதி வேல் யாத்திரை நடத்த அனுமதியளிக்க காவல்துறை உத்தரவிடவேண்டும்.” எனக் கோரியிருந்தார்.

Read Entire Article