கடலூர்: கடலூர் மாவட்டம் வடலூர் நகராட்சியில் முடிவுற்ற திட்டப்பணிகள் தொடக்க விழா நடந்தது. இதில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் கலந்து கொண்டு கூடுதல் வகுப்பறை கட்டிடம், ஆரம்ப துணை சுகாதார நிலையம் உள்ளிட்டவற்றை திறந்து வைத்து பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பாக ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரையுடன் முழு கரும்பு வழங்கப்படும் என தமிழக முதல்வர் தெரிவித்துள்ள நிலையில் அரசு வழிகாட்டுதலின்படி பொங்கல் தொகுப்பு முழுக்கரும்பு மாவட்ட ஆட்சியர்கள் கண்காணிப்பில் கொள்முதல் செய்யப்படும் என்று கூறினார்.
The post பொங்கல் பரிசுத் தொகுப்பு கரும்புகள் மாவட்ட ஆட்சியர்களின் கண்காணிப்பில் கொள்முதல் செய்யப்படும்: அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் appeared first on Dinakaran.