பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.30,000 வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு

4 months ago 10

மதுரை,

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி வருகிறது. பொங்கலுக்கு தேவையான பொருள்களுடன் சேர்த்து ரொக்கப் பணமும் வழங்கப்படும். கடந்த ஆண்டு 1,000 ரூபாய் ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கும் வழங்கப்பட்டது.

இந்த சூழலில் இந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பில் பொங்கலுக்கு தேவையான பொருள்கள் மட்டும் அறிவிக்கப்பட்டது. ரொக்கப் பணம் அறிவிக்கப்படவில்லை. இது மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சூழலில் பொங்கல் பரிசுத் தொகை அறிவிப்பு, தமிழக மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.30,000 வழங்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "பொங்கல் பரிசுத்தொகை ஏன் கொடுக்கவில்லை என்பது அவர்களுக்கு தான் வெளிச்சம். பொங்கல் பரிசு தொகுப்பாக அதிமுக ஆட்சியில் 2,500 ரூபாய் வரையில் வழங்கபட்டது.. அப்போது எதிர்க்கட்சி தலைவராக ஸ்டாலின், பொங்கல் பரிசுத்தொகையாக ரூ.5,000 வழங்க வேண்டும் என்றார். அப்படி பார்த்தால் இன்றைய மதிப்பிற்கு ரூ.30,000 வருகிறது..எனவே இந்த அரசு "பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.30,000 வழங்க வேண்டும். போன முறையே போராடி தான் ஒரு முழு கரும்பும், ரூ.1,000 பரிசு தொகை கிடைத்தது." என்று செல்லூர் ராஜு கூறினார். 

Read Entire Article