பொங்கல் பண்டிகையை ஒட்டி கடந்த 2 நாட்களில் சென்னையில் இருந்து அரசு பேருந்துகளில் 4.13 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம்

2 hours ago 3

சென்னை: பொங்கல் பண்டிகையை ஒட்டி கடந்த 2 நாட்களில் சென்னையில் இருந்து அரசு பேருந்துகளில் 4.13 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளார். நேற்று வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன் கூடுதலாக 2,015 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 4,107 பேருந்துகள் இயக்கப்பட்டது.

தமிழக்த்தில் தை மாதம் முதல் நாள்(ஜன.14) பொங்கள் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதனை தொடர்ந்து மாட்டுப்பொங்களும்(ஜன.15), காணும்பொங்களும்(ஜன.16) கொண்டாடப்படுகிறது. இதனை அடுத்து ஜனவரி 17-ம் தேதி பொது விடுமுறையாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. 18-ம் தேதி சனிகிழமை, 19-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என வாரம் முழுவதும் விடுமுறையாக உள்ளது.

சென்னையில் கல்வி, வேலை காரணமாக வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் குறிப்பாக தென் மாவட்ட மக்கள் அதிகம் பேர் வசித்து வருகின்றனர். இவர்கள் பண்டிகையை கொண்டாடுவதற்காக, தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுக்கத் தொடங்கினர். இதனால், சென்னையில் முக்கிய ரயில் நிலையங்களிலும், பேருந்து நிலையங்களிலும் பயணிகளின் கூட்டம் அதிக அளவில் உள்ளது.

பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்லும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் 5 ஆயிரத்து 736 சிறப்பு பஸ்களும், தமிழ்நாடு முழுவதிலும் 44,580 சிறப்பு பஸ்களும் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பொங்கல் தொடர் விடுமுறையை ஒட்டி கடந்த 2 நாட்களில் 4.13 லட்சம் பேர் அரசு பஸ்களில் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அரசு போக்குவரத்து துறை தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையின் சார்பில், பொங்கல் திருநாளினை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு பஸ்களின் இயக்கம் நேற்று (11.01.2025) நள்ளிரவு 12 மணி நிலவரப்படி, வழக்கமாக இயக்கப்படும் பஸ்களின் எண்ணிக்கையான 2,092 பஸ்களில் 2,092 பஸ்களும் 2,015 சிறப்பு பஸ்களும் ஆக 4,107 பஸ்களில் 2,25,885 பயணிகள் பயணம் செய்தனர். கடந்த 10.01.2025 முதல் 11.01.2025 இரவு 12 மணி வரை 7,513 பஸ்களில் 4,13,215 பயணிகள் பயணித்துள்ளனர்.

The post பொங்கல் பண்டிகையை ஒட்டி கடந்த 2 நாட்களில் சென்னையில் இருந்து அரசு பேருந்துகளில் 4.13 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் appeared first on Dinakaran.

Read Entire Article