தமிழ்நாட்டில் 15-ம் தேதி ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

3 hours ago 2

சென்னை: தமிழ்நாட்டில் 15-ம் தேதி ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

அதன் காரணமாக தமிழகத்தின் ஒரிரு இடங்களில் 7 முதல் 11 செ.மீ வரை மழை பொழிவுற்கு வாய்ப்பிருப்பதால் ஜனவரி 15-ம் தேதி மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரில் இன்று முதல் 4 நாட்கள் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காலை நேரங்களில் கடுமையான பனிபொழிவு ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தின் மழை பகுதிகளில் உறைபனி நிலவிவருகிறது.

The post தமிழ்நாட்டில் 15-ம் தேதி ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article