பையனூர் விநாயகா மிஷன் பல்கலையில் ஏஐ நெக்சஸ் கிளப் தொடக்கம்

2 months ago 12

சென்னை: சென்னை பையனூரில் உள்ள விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவனம் நிகழ்நிலை பல்கலைக்கழகம் அறுபடை வீடு பொறியியல் கல்லூரியின் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை செயற்கை நுண்ணறிவுக்கான கண்டுபிடிப்பு மற்றும் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் நோக்கில் ஏஐ நெக்சஸ் கிளப் (AI NEXUS CLUB) தொடங்கியுள்ளது. இந்த மாணவர் அமைப்பானது அனைவருக்கும் செயற்கை நுண்ணறிவு எனும் AICTE இன் கொள்கையை சார்ந்து அமைக்கப்பட்டது. இதன் தொடக்க விழாவில் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை தலைவர் பேராசிரியர் முனைவர் எஸ்.பாலகிருஷ்ணன் வரவேற்புரை ஆற்றினார்.

இந்த அமைப்பின் செயல்பாட்டினை விளக்கி மாணவர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களையும் பயிற்சி பட்டறைகளையும் மற்றும் பல்வேறு வாய்ப்புகளையும் வழங்கும் என கல்லூரியின் முதல்வர் முனைவர் ஜி.செல்வகுமார் தலைமை உரை நிகழ்த்தி கல்வியில் சேர்க்கை நுண்ணறிவின் முக்கியத்துவத்தை குறித்து எடுத்துரைத்தார். புதுச்சேரி அறுபடை வீடு மருத்துவக் கல்லூரியின் செயற்கை நுண்ணறிவு மையத்தின் இயக்குனர் டாக்டர் பார்த்திபன் சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 2025ல் ஏஐ புரட்சி ஏன் இது எப்போதையும் விட முக்கியமானது என்ற தலைப்பில் நவீன தொழில்களில் மாற்றத்தக்க தாக்கம் குறித்தும் செயற்கை நுண்ணறிவு சுகாதாரம், நிதி மற்றும் ஆட்டோமேஷன் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பரிணாம வளர்ச்சியுடன் புதுமையான திட்டங்கள் மற்றும் ஆராய்ச்சியில் ஈடுபட ஏஐ நெக்சஸ் கிளப் உந்து சக்தியாக செயல்படும் என எடுத்துரைத்தார்.

The post பையனூர் விநாயகா மிஷன் பல்கலையில் ஏஐ நெக்சஸ் கிளப் தொடக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article