பைக்கில் துப்பட்டா சிக்கி புதுப்பெண் பரிதாப பலி: கணவர் கண்முன்னே சோகம்

4 hours ago 2


திருமலை: பைக் சக்கரத்தில் துப்பட்டா சிக்கி புதுப்பெண் உயிரிழந்தார். கணவர் கண்முன்னே இந்த துயரம் நடந்துள்ளது. ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் கேசனகுருவைச சேர்ந்த ராமதுர்கா(28). இவருக்கும் கோணசீமா மாவட்டம் போலவரத்தை சேர்ந்த மோகன்கிருஷ்ணா என்பவருக்கும் சில மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. இதன்பிறகு மோகன் கிருஷ்ணாவுக்கு அச்சுதபுரம் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் வேலை கிடைத்ததால் அவர்கள் அதேபகுதியில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில், ராமதுர்காவுக்கு காதுவலி ஏற்பட்டதால் மருத்துவமனை செல்வதற்காக பைக்கில் சென்றார்.

ஹரிபாலம் பகுதியை கடந்தபோது ராமதுர்கா அணிந்திருந்த துப்பட்டா, பைக்கின் பின் சக்கரத்தில் சிக்கியுள்ளது. இதை அவ்வழியாக சென்ற சக வாகன ஓட்டிகள் கவனித்து எச்சரிப்பதற்குள் சக்கரம் நடுவே துப்பட்டா சிக்கி ராமதுர்கா கழுத்து இறுக்கியதால் பைக்கில் இருந்து சாலையில் விழுந்து காயம் அடைந்தார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டுசென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே ராமதுர்கா இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மனைவி உடலை பார்த்து கணவர் கதறி அழுதார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

The post பைக்கில் துப்பட்டா சிக்கி புதுப்பெண் பரிதாப பலி: கணவர் கண்முன்னே சோகம் appeared first on Dinakaran.

Read Entire Article