பழைய ஓய்வூதிய திட்டத்தை செப்டம்பருக்குள் நிறைவேற்ற அரசுக்கு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு வேண்டுகோள்

5 hours ago 5

ராமநாதபுரம்: “ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கான தேர்தல் வாக்குறுதிகளை செப்டம்பர் மாதத்துக்குள் நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில், ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்புடன் இணைந்து போராட்டங்களில் பங்கெடுப்போம்” என தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலாளர் பி.பேட்ரிக் ரெய்மாண்ட் தெரிவித்தார்.

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில பொதுக்குழுக் கூட்டம் ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரி வளாகத்தில் இன்று (மே 1) நடைபெற்றது. மாநிலத் தலைவர் கி.தங்கவேலு தலைமை வகித்தார். தீர்மானங்களை முன்மொழிந்து மாநில பொதுச்செயலாளர் பி.பேட்ரிக் ரெய்மாண்ட் பேசினார். மாநில பொருளாளர் எஸ்.நாராயணன் வரவு செலவு அறிக்கை சமர்பித்தார். தமிழ்நாடு அளவிலான நேரடி நியமன பள்ளி ஆய்வக உதவியாளர் சங்க தலைவர் ம.அர்ஜூன் வாழ்த்தி பேசினார்.

Read Entire Article