பைக் விபத்தில் தம்பதி படுகாயம் இரணியல் போலீசார் விசாரணை

4 months ago 12

திங்கள்சந்தை, ஜன. 3: நாகர்கோவில் கட்டையன் விளை காமராஜர் தெரு பகுதியை சேர்ந்தவர் முருகன் (62). கட்டிட தொழிலாளி. சம்பவத்தன்று காலை மனைவி அம்பிகாவுடன் பைக்கில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலுக்கு வந்தார். அங்கு வழிபாடுகளை முடித்து விட்டு மதியம் வீடு திரும்பினர். முருகன் பைக்கை ஓட்ட அவரது மனைவி பின்னால் அமர்ந்திருந்தார். செட்டியார்மடம் பகுதியில் பைக் வந்தபோது ஓரமாக நிறுத்தி இருந்த ஒரு பைக்கை அதன் ஓட்டுநர் திடீரென எடுத்ததில் முருகன் பைக் மீது மோதியதாக தெரிகிறது. இதில் தூக்கி வீசப்பட்ட தம்பதி படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு குளச்சலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இது குறித்து முருகன் இரணியல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் விபத்தை ஏற்படுத்திய தக்கலை புதுக்காடுவெட்டிவிளையை சேர்ந்த ஜோசப் ஸ்டாலின் (51) மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பைக் விபத்தில் தம்பதி படுகாயம் இரணியல் போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Read Entire Article