பைக் மீது லாரி மோதி வாலிபர் பலி

1 month ago 5

பேட்டை, நவ.20: வீரவநல்லூர் அடுத்த பாரதியார்நகரை சேர்ந்த மாயாண்டி மகன் இசக்கியப்பன் (20). ரெட்டியார்பட்டியில் உள்ள பெட்ரோல் பங்கில் ஊழியராக வேலை பார்த்துவந்த இவர், நேற்று மாலை வழக்கம்போல் வேலை முடிந்த பிறகு தனது பைக்கில் வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தார்.சுத்தமல்லி அடுத்த பழவூர் அருகே சென்றபோது எதிரே வந்த லாரி, இவரது பைக் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த இசக்கியப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவலறிந்து விரைந்து வந்த சுத்தமல்லி இன்ஸ்பெக்டர் சோனமுத்து மற்றும் போலீசார், இசக்கியப்பனின் உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

The post பைக் மீது லாரி மோதி வாலிபர் பலி appeared first on Dinakaran.

Read Entire Article