புதுச்சேரி, பிப், 6: புதுச்சேரி பாரதி வீதியை சேர்ந்தவர் தரன். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தரன், பைக்கை தனது வீட்டின் வெளியே நிறுத்தியுள்ளார். பின்னர் மறுநாள் அவர் எழுந்து வந்து பார்த்த போது, வாகனம் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அக்கம் பக்கத்தில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. அதனை யாரோ மர்ம நபர் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தரன் பெரியகடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிந்து பைக்கை திருடிய நபரை தேடி வருகின்றனர்.
The post பைக் திருட்டு appeared first on Dinakaran.