பேராவூரணியில் மழை, தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எம்எல்ஏ நிதியுதவி

4 weeks ago 8

 

பேராவூரணி , டிச.20: பேராவூரணி ,சேதுபாவாசத்திரம் ஒன்றியப் பகுதிகளில் அண்மையில் பெய்த தொடர் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும்,தீ விபத்தில் வீடிழந்த குடும்பத்திற்கும் எம்எல்ஏ அசோக்குமார் தமது சொந்தப் பணத்தில் இருந்து மொத்தம் ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கினார் . பேராவூரணி அருகே உள்ள வலப்பிரம்மன்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் மூதாட்டி பார்வதி (75), இவர் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த போது, தீப்பொறி பட்டு குடிசை வீடு தீப்பிடித்து எரிந்து முற்றிலும் நாசமானது. தகவல் அறிந்த எம்எல்ஏ அசோக்குமார் நேரில் சென்று ஆறுதல் கூறி ரூ.5 ஆயிரம் நிதியுதவி வழங்கினார்.

தொடர்ந்து ண. கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால் வீடு இடிந்த சானாகரை வெற்றிச் செல்வி, ஆண்டாகோட்டை ராமமூர்த்தி, சொர்ணக்காடு குமார், நெல்லியடிக்காடு ராஜகோபால், மணிமேகலை, தர்மலிங்கம், மங்களம், வீரக்குடி பாஸ்கர், கீழ மணக்காடு மாலதி, குணசேகரன், பாப்பா, இந்திரா, சக்தி, மேல மணக்காடு சின்னையா, ராஜரெத்தினம், கழனிவாசல் நீலாவதி ஆகியோருக்கு மொத்தம் ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கினார். பேராவூரணி திமுக தெற்கு ஒன்றியச் செயலாளர் அன்பழகன், கவிஞர் மா,பழனிவேல் , மணக்காடு ஊராட்சி மன்றத் தலைவர் விஜயகுமார்,ஒன்றியக்குழு உறுப்பினர் அழகுமீனா தங்கப்பன் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

The post பேராவூரணியில் மழை, தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எம்எல்ஏ நிதியுதவி appeared first on Dinakaran.

Read Entire Article