பேராவூரணி: பொன்னி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

1 day ago 3

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி நகர் பொன்னாங்கண்ணிக்காடு புற்றுநோய் தீர்த்த பொன்னி விநாயகர், அருள்மிகு பாலமுருகன், அருள்மிகு துர்க்கையம்மன், அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோவில் மற்றும் நாக தேவதைகள், நவக்கிரக திருக்கோவில்களில் கும்பாபிஷேகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக திருப்பணிகள் செய்யப்பட்டு திங்கள்கிழமை காலை கும்பாபிஷேக விழா தொடங்கியது. அன்றைய தினம் முதல் கால யாக வேள்வி, தீபாராதனை நடைபெற்றது.

செவ்வாய்க்கிழமை இரண்டாம் கால யாக சாலை பூஜை ஆரம்பித்து விசேஷ சாந்தி, ஜப பாராயணம், பூர்ணாஹுதி தீபாரதனை, மாலையில் மூன்றாம் கால யாகசாலை பூஜை யந்திரம் வைத்து, அஷ்டபந்தன மருந்து சாத்தி பூர்ணாஹுதி தீபாராதனை நடைபெற்றது.

நேற்று (புதன்கிழமை) நான்காம் கால யாகசாலை பூஜை, பிம்பசுத்தி, ரக்சா பந்தனம், கோமாதா பூஜை, லட்சுமி பூஜை, நாடி சந்தானம், மகா பூர்ணாஹுதி, தீபாராதனை, யாத்ரா தானம், கடம் புறப்பாடாகி காலை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இந்நிகழ்வுகளில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Read Entire Article