சென்னை: தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: சட்டமன்றக் கூட்டத்தொடரின் இறுதி நாளான நேற்று காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை தொடர்பான மானியக் கோரிக்கைகளின் போது சிறப்பான முறையில் பதிலளித்து பேசிய தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் உதயகுமார், எதிர்க்கட்சி கொறடா வேலுமணி, காங்கிரஸ் கட்சியின் செல்வப்பெருந்தகை, ராஜேஷ் குமார், பாமக ஜி.கே. மணி, விசிக சிந்தனைச்செல்வன், இந்திய கம்யூனிஸ்ட் ,
மார்க்சிஸ்ட், மதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், கொங்கு தேசிய மக்கள் கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஈஸ்வரன், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா, தமிழ்நாடு வாழ்வுரிமை கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இவ்வாறு அரசு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
The post பேரவையில் சிறப்பான பதில் அளித்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பல்வேறு கட்சி எம்.எல்.ஏக்கள் வாழ்த்து appeared first on Dinakaran.