தாய்லாந்து ஓபன் பேட்மின்டன்: இந்திய வீராங்கனைகள் தோல்வி

6 hours ago 2

பாங்காக்: தாய்லாந்து ஓபன் பேட்மின்டன் தொடரில் இந்திய வீராங்கனைகள் மாளவிகா பன்சோத், உனதி ஹூடா ஆகியோர் 2வது சுற்றில் தோல்வி அடைந்தனர். பாங்காக் நகரில் தாய்லாந்து ஓபன் பேட்மின்டன் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்று போட்டியில் 17 வயதான இந்தியாவின் உனதி ஹூடா, உலகத் தரவரிசையில் 2வது இடத்தில் உள்ள தாய்லாந்தின் சொச்சுவாங்குடன் மோதினார். 39 நிமிடங்கள் மட்டுமே நடைபெற்ற இந்த போட்டியில் 21-14, 21-11 என்ற செட் கணக்கில் உனதி ஹூடாவை, சொச்சுவாங் வீழ்த்தினார்.

இதே போல் உலகத் தரவரிசையில் 23வது இடத்தில் உள்ள இந்தியாவின் மாளவிகா பன்சோத், முன்னாள் உலக சாம்பியனும், தரவரிசையில் 5வது இடத்தில் உள்ளவருமான தாய்லாந்தின் ரட்சனோக் இன்டனானை எதிர்த்து விளையாடினார். இதில் 21-12, 21-16 என்ற நேர் செட் கணக்கில் ரட்சனோக்கிடம், மாளவிகா தோல்வி அடைந்தார்.மற்றொரு போட்டியில் தாய்லாந்தின் சுபானிடா காடேதாங் 21-9, 21-14 என்ற செட் கணக்கில் இந்தியாவின் ஆகார்ஷி காஷ்யப்பை வீழ்த்தினார். மகளிர் இரட்டையர் பிரிவில் ஜப்பானின் ரூயி ஹிரோகமி, சயகா ஹோபரா ஜோடி, 22-20, 21-14 என்ற செட் கணக்கில் இந்தியாவின் காயத்ரி கோபிசந்த், ட்ரீசா ஜாலி ஜோடியை வீழ்த்தியது.

இதே போல் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று போட்டியில் தரவரிசையில் 53வது இடத்தில் உள்ள இந்தியாவின் தருண் மானேப்பள்ளி 14-21, 16-21 என்ற நேர் செட் கணக்கில் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள டென்மார்க்கின் ஆண்டர்ஸ் ஆன்டன்சென்னிடம் தோல்வி அடைந்தார்.

The post தாய்லாந்து ஓபன் பேட்மின்டன்: இந்திய வீராங்கனைகள் தோல்வி appeared first on Dinakaran.

Read Entire Article