சென்னை: சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரலையில் ஒளிபரப்புவது தொடர்பாக பேரவைத் தலைவர் அப்பாவு மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்த பின் நேரமில்லா நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி (அதிமுக) ஒரு விவகாரம் குறித்து பேச அனுமதி கோரினார். அப்போது பாமக உறுப்பினர் ஜி.கே.மணியும் எழுந்து நின்று பேச அனுமதி கேட்டார். அதற்கு பேரவைத் தலைவர் அப்பாவு, ஜி.கே.மணி முதலில் பேச அனுமதியளித்தார். இதனால் பழனிசாமி உட்பட அதிமுக உறுப்பினர்கள் ஆவேசமடைந்தனர். அப்போது பேரவையில் நடைபெற்ற விவாதம்:-