தனிக்குடித்தனம், வேலைக்காக சொந்த ஊர், பெற்றோர்களை விட்டு வெளியூரில் வாழ்க்கை என இதனாலேயே பல இளம் பெற்றோர்கள் குழந்தை வளர்ப்பில் பல சிக்கல்களை சந்திக்கிறார்கள். போதிய ஆலோசனைகள், பெரியவர்களின் வழிகாட்டுதல் இல்லாததால் குழந்தை வளர்ப்பு பல குழப்பங்கள் நிறைந்ததாக மாறுகிறது. இதற்குதான் முழுமையாக உதவுகிறது பேபி டெவலப்மென்ட் & பேரன்ட்டிங் செயலி (Baby Development & Parenting). அத்தனையும் ஓரிடத்திலான மொபைல் செயலியாக பெற்றோர்களுக்கு உதவுகிறது. குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து டயட் திட்டங்கள், டயப்பர், மற்றும் பால் கால அவகாச நேரம் மற்றும் அலெர்ட்கள், கதைகள், பால் கொடுக்கும் தாயார் உண்ண வேண்டிய உணவுகள் மற்றும் ஹெல்தி ஸ்னாக்ஸ் ஐட்டங்கள் என அனைத்தும் இந்த ஒரு செயலி கொடுக்கும். கர்ப்பம் உறுதியான நாள் முதல் கரு வளர்ச்சி புகைப்படத்தை இதில் கொடுக்க அன்றிலிருந்து ஒரு டிஜிட்டல் கார்டியனாகவே இந்தச் செயலி செயல்படத் துவங்கிவிடும்.
The post பேபி டெவலப்மென்ட் & பேரன்ட்டிங்! appeared first on Dinakaran.