ரேசன் அரிசி கடத்திய வேன் கவிழ்ந்து விபத்து: டிரைவர் தப்பியோட்டம்

6 hours ago 2

மானாமதுரை: மானாமதுரை அருகே ரேசன் அரிசியை கடத்திச் சென்ற வேன் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதையடுத்து டிரைவர் தப்பியோடிவிட்டார். மதுரையில் இருந்து ராமநாதபுரத்திற்கு சரக்கு வேன் ஒன்று நேற்று மாலை சென்றுகொண்டிருந்தது. சிவகங்கை மாவட்டம், கிருங்காகோட்டை அருகே சென்றபோது சரக்கு வேனின் டயர் திடீரென வெடித்தது. இதில் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோரம் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அப்போது அவ்வழியாக சென்றவர்கள் சரக்கு வேனில் சிக்கிய டிரைவரை மீட்டனர். அவருக்கு பெரிய அளவில் காயமில்லை. ஆனால், சிறிது நேரத்தில் அங்கிருந்து நழுவி தப்பிச் சென்றுவிட்டார்.

சரக்கு வேன் கவிழ்ந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மானாமதுரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் வேனை சோனையிட்டபோது, 40 மூட்டைகளில் ரேசன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்துவந்து சரக்கு வேனுடன் ரேசன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர். மேலும், ரேசன் அரிசி கடத்தலில் தொடர்புடையோர் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ரேசன் அரிசி கடத்திய வேன் கவிழ்ந்து விபத்து: டிரைவர் தப்பியோட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article