தன்பாத்: ஜார்க்கண்ட் மாநிலத்தில் பேனா தினம் கொண்டாடிய 80 பள்ளி மாணவிகளை சட்டையை கழற்றி விட்டு வீட்டுக்கு அனுப்பி பள்ளி முதல்வரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டம் திக்வாடியில் ஒரு பிரபல தனியார் பள்ளி உள்ளது. அந்த பள்ளியில் படிக்கும் 10ம் வகுப்பு மாணவிகள் பேனா தினம் கொண்டாடினர். அப்போது பேனாவால் ஒருவர் சட்டையில் இன்னொருவர் எழுதினார்கள். இதைப்பார்த்த பள்ளி முதல்வர் எதிர்ப்பு தெரிவித்தார்.
மாணவிகள் மன்னிப்பு கேட்டாலும், அத்தனை மாணவிகளையும் மேல் சட்டையை கழற்றி தரும்படி உத்தரவிட்டார். மாணவிகள் சட்டையை கழற்றி கொடுத்ததும், சட்டை இல்லாமல் அப்படியே வீட்டுக்கு போக உத்தரவிட்டார். சுமார் 80 மாணவிகள் சட்டை இல்லாமல் தங்கள் பிளேஸர்களில் வீடு திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதைப்பார்த்த பெற்றோர்கள் கொதித்துப்போய் போலீசில் புகார் அளித்தனர். மாவட்ட நிர்வாகம் சார்பில் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது.
The post பேனா தினம் கொண்டாடிய 80 மாணவிகளின் சட்டையை கழற்ற உத்தரவிட்ட முதல்வர்: ஜார்க்கண்ட் பள்ளியில் பரபரப்பு appeared first on Dinakaran.