சென்னை: பொறியியல் கல்லூரிகள் இணைப்பு அங்கீகாரம் கோரி விண்ணப்பிக்கும்போது போதுமான தகவல்களை தெரிவிக்காவிட்டால், அதன் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகள் தங்கள் இணைப்பு அங்கீகாரத்தை ஆண்டுதோறும் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். அதன்பின்னரே பொறியியல் கல்லூரிகள் மாணவா் சோ்க்கையை நடத்த முடியும். இதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டு வருகிறது.