புதுச்சேரி புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் 35வது மலர், காய்கனி கண்காட்சி இன்று மாலை தொடங்குகின்றது. புதுச்சேரியில் வேளாண் துறை சார்பில் ஆண்டுதோறும் மலர், காய், கனி கண்காட்சி நடத்தப்படும். அதன்படி இந்தாண்டு 35வது மலர், காய்கனி கண்காட்சி தாவரவியல் பூங்காவில் இன்று துவங்குகிறது. இந்த கண்காட்சி 9ம் தேதி வரை நடக்கிறது. இன்று மாலை நடக்கும் தொடக்க விழாவில் கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் கண்காட்சியை தொடங்கி வைக்கின்றனர். மலர் கண்காட்சியில் புதுவை அரசின் தோட்டக்கலைத்துறை சார்பில் உருவாக்கப்பட்ட மலர் செடிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
கண்காட்சியை காண வரும் பார்வையாளர்களை கவரும் விதமாக மலர்களால் பல்வேறு விலங்குகள், பறவைகள் போன்று தத்ரூபமாக உருவாக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும் வீரிய காய்கறிகளின் ரகங்கள், வீரிய கனிகளின் ரகங்கள், வேளாண் ஆராய்ச்சி நிறுவனங்களின் அரங்குகள், வேளாண் தொழில்நுட்ப கருத்தரங்குகள், மலர் ரங்கோலி, தோட்டக்கலை கருவிகள் மற்றும் உபகரணங்கள், பிரதான தோட்டக்கலை பொருட்கள் உற்பத்தியாளர்களின் விற்பனை அரங்குகள், இசை நடன நீரூற்று ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து குழந்தைகளுக்காக சிறுவர் உல்லாச ரயிலும் இயக்கப்படுகிறது.
The post புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் 35வது மலர், காய்கனி கண்காட்சி appeared first on Dinakaran.