பெல் நிறுவனத்தில் 50 வெல்டர்கள்

1 week ago 4

பணி: வெல்டர்- 50 இடங்கள் (பொது-22, எஸ்சி-7, எஸ்டி-3, ஒபிசி-13, பொருளாதார பிற்பட்டோர்-5).
வயது: 01.10.2024 தேதியின்படி 30க்குள். அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.
சம்பளம்: ரூ.42,500.
தகுதி: வெல்டர் பிரிவில் 60% மதிப்பெண்களுடன் ஐடிஐ தேர்ச்சி மற்றும் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
திறன் தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். அவர்களுக்கு மாதம் ரூ.15 ஆயிரம் உதவித் தொகையுடன் பயிற்சி வழங்கப்படும். பயிற்சிக்கு பின்னர் பணி வழங்கப்படும்.
கட்டணம்: ரூ.250/-. இதை ஸ்டேட் வங்கி மூலம் ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் கிடையாது.
https://careers.bhel.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 08.11.2024.

The post பெல் நிறுவனத்தில் 50 வெல்டர்கள் appeared first on Dinakaran.

Read Entire Article