புதுடெல்லி: அதிக மக்கள் தொகை மற்றும் செழுமையான வரலாற்று பின்ன ணியைக் கொண்ட பிஹார் மாநிலத்துக்கு இதுவரை ஒரு நல்ல சர்வதேச விமான நிலையம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
பட்ஜெட் அறிவிப்பில் பிஹார் மாநிலத்துக்கு சாதகமான பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. சட்டப்பேரவை தேர்தலை மனதில் வைத்தே இந்த பட்ஜெட்டில் பிஹாருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்த நிலையில், பட்ஜெட்டுக்குப் பிறகு ஊடகம் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளதாவது: முன்னாள் அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கனின் காலத்தால் அழியாத சொற்றொடரான ‘‘மக்களின் அரசாங்கம், மக்களால், மக்களுக்கு’’ அளிக்கப்பட்ட பட்ஜெட் இது. மக்களின் குரலை அடிப்படையாகக் கொண்டே இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. தேர்தலை மனதில் வைத்து இந்த பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது என்ற கருத்தை நான் ஏற்கவில்லை. அப்படியென்றால் அசாம் மாநிலத்துக்கும்தான் தேர்தல் வருகிறது.