பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை புத்தகக் கண்காட்சிக்கு அழைத்து வர வேண்டும் - அண்ணாமலை

22 hours ago 1

சென்னை,

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று சென்னை புத்தக கண்காட்சிக்கு சென்றார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;

"இன்றைய தினம், சென்னை புத்தகக் கண்காட்சிக்குச் செல்லும் இனிய வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. குழந்தைகளுக்கு, புத்தகங்களின் அறிமுகத்தைக் கொடுப்பது நமது கடமை.

வரும் ஜனவரி 12 ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் இந்த புத்தகக் கண்காட்சிக்கு, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்து வருமாறு கேட்டுக்கொள்கிறேன். பல துறைகள் சார்ந்த பல்வேறு புத்தகங்களை ஒரே இடத்தில் காணும்போது, குழந்தைகளுக்குப் புத்தகங்கள் படிக்கும் ஆர்வம் தூண்டப்படும்.

எனவே, அனைவரும், சென்னை புத்தகக் கண்காட்சியைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்."

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.  

Read Entire Article