
சமீபத்தில் சந்தீப் ரெட்டி வாங்கா படத்திலிருந்து விலகினார் தீபிகா படுகோன். இயக்குநருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுதான் காரணம் எனக் கூறப்பட்டது. தற்போது அட்லீ - அல்லு அர்ஜுன் இணைப்பில் உருவாகும் படத்தின் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் இதனை தயாரிக்கிறது.
அட்லீ இயக்கத்தில் உருவாகும் படத்தில் 5 நாயகிகள் நடிக்கவுள்ளனர். இதில் மிருணாள் தாகூர் மற்றும் ஜான்வி கபூர் நடிப்பது உறுதியாகி இருந்தது. அவர்களைத் தொடர்ந்து முக்கியமான நாயகியாக தீபிகா படுகோன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதர 2 நாயகிகளில் ஒருவராக நடிக்க பாக்யஸ்ரீ போஸிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
செப்டம்பரில் படப்பிடிப்பு தொடங்க படக்குழு ஆயத்தமாகி வருகிறது. விரைவில் படக்குழுவினர் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது. இந்திய சினிமாவில் இப்படியொரு கதைக்களம் வந்ததில்லை என்கிறார்கள். அந்தளவுக்கு ஹாலிவுட் தொழில்நுட்பக் கலைஞர்களுடன் இணைந்து பெரும் பொருட்செலவில் உருவாக்கவுள்ளார் இயக்குநர் அட்லீ.