பெற்றோர் கனவுகளை வருவாயாக மாற்றும் பாஜ அரசு தேர்வு படிவங்களுக்கு 18% ஜிஎஸ்டி பிரியங்கா காந்தி எம்பி கண்டனம்

3 weeks ago 5

புதுடெல்லி: தேர்வுக்கான படிவங்களுக்கு 18% ஜிஎஸ்டி விதிக்கப்படுவதாகவும் பெற்றோர்களின் கனவுகளை வருவாயாக பாஜ அரசு மாற்றுகிறது என காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். உபி மாநிலம், லக்னோ, சுல்தான்பூர் சாலையில் உள்ள கல்யாண்சிங் சூப்பர் ஸ்பெஷாலிட்டி புற்று நோய் மருத்துவமனையில், பல்வேறு துறைகளில் பணி நியமனம் செய்ய தேர்வு நடத்தப்படுகிறது. தேர்வில் கலந்து கொள்வதற்கான விண்ணப்ப படிவங்களுக்கு 18 % ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான ஊடக செய்தியை பகிர்ந்துள்ள காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி எக்ஸ் தளத்தில் பதிவிடுகையில், பாஜ அரசால் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை அளிக்க முடியவில்லை. வெந்த புண்ணிலே வேலை பாய்ச்சுவதை போல் தேர்வு படிவங்களுக்கு 18% வரியை ஒன்றிய அரசு விதிக்கிறது. அக்னிவீரர் திட்டம் உள்பட பல்வேறு அரசு வேலைகளுக்கு தேர்வுக்கான படிவங்களுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது.

தேர்வு படிவங்களை பூர்த்தி செய்த பிறகு ஒருவேளை வினாத்தாள்கள் கசிந்தால் இளைஞர்கள் செலுத்திய பணம் வீணாக்கப்படுகிறது.  பெற்றோர்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்து ஒவ்வொரு பைசாவையும் சேமித்து தங்கள் குழந்தைகளைப் படிக்கவும், தேர்வுகளுக்குத் தயார்படுத்தவும் செய்கின்றனர். ஆனால் பாஜ அரசு அவர்களின் கனவுகளை வருமான ஆதாரமாக மாற்றியுள்ளது என்று சாடியுள்ளார்.

The post பெற்றோர் கனவுகளை வருவாயாக மாற்றும் பாஜ அரசு தேர்வு படிவங்களுக்கு 18% ஜிஎஸ்டி பிரியங்கா காந்தி எம்பி கண்டனம் appeared first on Dinakaran.

Read Entire Article