திருச்சி: திருச்சி - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் அரிய மங்கலம் பால்பண்ணை முதல் துவாக்குடி வரைசாலை முறையாக சீரமைக்கப்படாமல் சின்னாபின்னமாகி கிடப்பதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே, இந்த சாலையை உடனே செப்பனிட தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சி- தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலை பல இடங்களில் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இந்த சாலையை பயன்படுத்தும் வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சாலையை முறையாக பராமரிப்பதில்லை என குற்றம் சுமத்துகின்றனர் சமூக ஆர்வலர்கள்.