கெங்கவல்லி: சேலம் மாவட்டம், ஆத்துரை சேர்ந்த 14 வயது சிறுமி அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். வீட்டில் தனியாக இருந்த சிறுமியை, அதே பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவரான குமரேசன்(50) பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இதுகுறித்து சிறுமி, பள்ளி வகுப்பு ஆசிரியையிடம் தெரிவித்துள்ளார். அந்த ஆசிரியை மாணவியின் தந்தையிடம் தெரிவிக்கவே, அவர் சேலம் குழந்தைகள் உதவி மையத்தில் புகாரளித்தார்.
இதையடுத்து, ஆத்தூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தியதில், லாரி டிரைவர் குமரேசனுக்கும், சிறுமியின் தாய் சசிகலாவுக்கும் இடையே தகாத உறவு இருந்தது தெரியவந்தது. கடந்த பிப்ரவரி 17ம்தேதி, வீட்டில் இருந்த சிறுமியை, காதலன் குமரேசனுடன் உல்லாசமாக இருக்கும்படி, சசிகலா கட்டாயப்படுத்தி உள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த சிறுமியை, குமரேசன் பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும், இதை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார்.
தொடர்ந்து, பிப்ரவரி 20 மற்றும் மார்ச் 3ம் தேதிகளில், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். ஒரே நாளில், இரண்டு முறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதற்கு சிறுமியின் தாய் சசிகலாவும், உடந்தையாக இருந்துள்ளார். இதையடுத்து ஆத்தூர் மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து, லாரி டிரைவர் குமரேசன், சிறுமியின் தாய் சசிகலா(35) ஆகியோர் மீது, ‘போக்சோ’ மற்றும் கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிந்து, அவர்களை நேற்று கைது செய்தனர்.
லாரி டிரைவரான சிறுமியின் தந்தைக்கு, குமரேசன் நண்பராவார். நண்பன் என்ற முறையில் வீட்டில் அனுமதித்ததால், அவரது மனைவியுடன் கள்ளத்தொடர்பு கொண்டு, மகளை பாலியல் தொந்தரவு செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post பெற்ற மகளை காதலனுக்கு விருந்தாக்கிய கொடூர தாய்: போக்சோவில் இருவரும் கைது appeared first on Dinakaran.