பெருவில் ரிக்டர் 5.7 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

2 hours ago 3

லிமா,

தென் அமெரிக்கா நாடான பெருவில் உள்ள சாண்டா ஆனா நகரில் இருந்து சுமார் 14 கி.மீ. வடகிழக்கில் நேற்று இரவு 7.39 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவாகி உள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் மையமானது தரைமட்டத்தில் இருந்து சுமார் 79.4 கி.மீ. ஆழத்தில் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Read Entire Article