"பெருமாள் அழைக்காமல் திருப்பதி வர முடியாது" - நடிகர் விஜயகுமார்

4 weeks ago 6

திருப்பதி,

பழம் பெரும் நடிகர் விஜயகுமார், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் சுமார் 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து இருக்கிறார்.

இந்நிலையில், நடிகர் விஜயகுமார் மகள் ஸ்ரீதேவி உள்ளிட்ட குடும்பத்தினருடன் திருப்பதி சென்று பெருமாளை தரிசனம் செய்த வீடியோ வெளியாகியுள்ளது. அவர்களுக்கு தேவஸ்தானம் தரப்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

அப்போது பேட்டியளித்திருந்த விஜயகுமார், 'பெருமாள் அழைக்காமல் அவரை பார்க்க வரமுடியாது. அவரின் தரிசனம் பெற்றது மிக்க மகிழ்ச்சி. அனைவரும் நலமாக இருக்க வேண்டும்' என்றார்.

மேலும், நடிகை ஸ்ரீதேவி கூறுகையில், 'பெருமாளை தரிசித்ததில் ரொம்ப சந்தோஷம். இயக்குனர் வெங்கடேஷ் நிமலபுடி இயக்கத்தில் 'சுந்தரகாண்டா' என்ற படத்தில் நடித்துள்ளேன்.விரைவில் ரீலிஸாகவிருக்கிறது' என்றார்.

Read Entire Article