
புதுடெல்லி,
ஐ.பி.எல். தொடரில் டெல்லியில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. சென்னை அணி 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 187 ரன்கள் எடுத்தது. சென்னை அணி தரப்பில் அதிகபட்சமாக பிரெவிஸ் 42 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து 188 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ஆடியது. ராஜஸ்தான் அணி துவக்கத்தில் இருந்தே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 17.4 ஓவர்களில் 4 விக்கெட் மட்டுமே இழந்து 188 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை எட்டியது. 13 ஆட்டங்களில் விளையாடிய சென்னை அணிக்கு இது 10-வது தோல்வியாகும்.
இந்த நிலையில், போட்டிக்கு பின்னர் ராஜஸ்தான் வீரர் துருவ் ஜூரேல் தோனியை சந்தித்துள்ளார் . இது தொடர்பாக துருவ் ஜூரேல் வெளியிட்டுள்ள பதிவில் ,
மஹி பாய், எப்போதும் உங்களின் மாணவனாக நான் . உங்கள் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகளுக்கு நன்றி. எப்போதும் மகிழ்ச்சி. என தெரிவித்துள்ளார் .