பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் பேசுவது அண்ட புளுகு ஆகாச புளுகு: திமுக செய்தி தொடர்பாளர் ராஜீவ் காந்தி சாடல்!!

2 weeks ago 3

சென்னை: சீமான் பேசுவது அண்ட புளுகு ஆகாச புளுகு என்று திமுக செய்தி தொடர்பாளர் ராஜீவ் காந்தி சாடியுள்ளார். பிரபாகரன் – சீமான் புகைப்படம் போலியானது என திமுக செய்தித் தொடர்பாளர் ராஜீவ் காந்தி சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்; யாரையும் பழிவாங்க வேண்டும் என்ற என்ணம் திமுகவுக்கு இல்லை. தமிழ் தேசியம் பேசிய அத்தனை தலைவர்களும் பெரியாரை ஏற்றுக் கொண்டனர். பெரியார் சொல்லாததை தொடர்ந்து சீமான் பேசினால் பதிலடி கொடுப்போம் என காட்டமாக தெரிவித்தார்.

மேலும், சீமான் தனிமனித ஒழுக்கம் இல்லாதவர். எப்போதும் சர்க்கஸ் காட்டி வருபவர் சீமான். சீமான் – பிரபாகரன் புகைப்படம் எடிட் செய்யப்பட்ட ஹார்ட் டிஸ்கை வாங்கி கொடுத்தது நான்தான். புகைப்படம் எடிட் ஆன பிறகு அந்த ஹார்ட் டிஸ்கை வாங்கி சீமானிடம் நான்தான் கொடுத்தேன். கம்பு சுற்ற விருப்பம் இருந்தால் களத்தில் சுற்ற வேண்டும், கட்சியினர் மத்தியில் சீமான் சுற்றக் கூடாது. ஒரு மாவீரர் பிரபாகரனை சமையல்காரர் என்று கூறி அவரை சீமான் கொச்சைப்படுத்திவிட்டார்.

மேலும், வீதியில் இறங்கி சீமான் ஓட்டுக் கேட்டதுண்டா? மேடையில் மட்டுமே வீர வசனம் பேசுவார். பிரபாகரனை சீமான் சந்தித்தது உண்மையாக இருக்கலாம்; ஆனால் புகைப்படம் போலி. பெரியாரை ஆதாரமற்ற தரவுகளின் மூலம் கொச்சைப்படுத்துவதை ஏற்க முடியாது. தன்னை நம்பியவர்கள் யாரையும் சீமான் காப்பாற்றியதில்லை. குடும்பத்துக்காக தவிர கட்சிக்காரருக்காக சீமான் பயணப்பட்டாரா? என்று ராஜீவ் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

The post பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் பேசுவது அண்ட புளுகு ஆகாச புளுகு: திமுக செய்தி தொடர்பாளர் ராஜீவ் காந்தி சாடல்!! appeared first on Dinakaran.

Read Entire Article