சாலையோர வியாபாரிகளுக்கு நிழற்குடை: போலீஸார் தடுத்ததால் தவெகவினர் வாக்குவாதம்

2 hours ago 2

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் சென்னை வடக்கு மாவட்டம் சார்​பில், மாவட்ட தலைமை அலுவலகம் திறப்பு மற்றும் சாலையோர வியாபாரி​களுக்கு நிழற்​குடை வழங்கும் நிகழ்ச்சி தி.நகர் முத்துரங்கன் சாலை​யில் நேற்று நடைபெற்​றது. மாவட்டச் செயலாளர் அப்புனு தலைமை​யில் நடைபெற்ற இந்த நிகழ்ச்​சி​யில், தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கலந்​து​கொண்டு மாவட்ட அலுவல​கத்தை திறந்து வைத்​தார்.

பின்னர், இருசக்கர வாகனத்​தில் பேரணி​யாகச் சென்று, முத்​துரங்கன் சாலை, உஸ்மான் சாலை, வெங்​கடநாராயணா சாலை, தெற்கு உஸ்மான் சாலை,பாண்டி பஜார், ஆயிரம் விளக்​கில் சாலையோர வியாபாரிகள் 505 பேருக்கு புஸ்ஸி ஆனந்த் நிழற்​குடை வழங்​கினார். அப்போது ஏராளமான தவெக தொண்​டர்​களும், சாலை​யில் கூடிய​தால், தி.நகர் பகுதி​யில் போக்கு​வரத்து நெரிசல் ஏற்பட்​டது.

Read Entire Article