சென்னை: சென்னை சேப்பாக்கம் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் ஜனநாயக கூட்டமைப்பு இயக்கம் சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய சமூகப் பிரச்னை, சூழலியல் பிரச்னை, சாதிய பிரச்சினைக்கு எதிராக இந்துத்துவாவோ சங்கிகளோ குரல் கொடுத்தது கிடையாது. தொடர்ச்சியாக களத்தில் போராடிக் கொண்டிருப்பது ஜனநாயக அம்பேத்கரிய மார்க்சிய ஜனநாயக அமைப்புகள்தான்.
சீமான் வீட்டை முற்றுகை இடக்கூடிய அளவிற்கு ஏன் செல்ல வேண்டும் என்றால், 20 நாட்களாக ஆதாரங்கள் கொடுக்க வேண்டும் என கேட்டு விட்டோம், ஆதாரம் கொடுக்காமல் தொடர்ச்சியாக பெரியார் மீது சீமான் அவதூறை அள்ளி வீசி வருகிறார். பரப்பும் அவதூறுக்கு பொறுப்பு ஏற்க மாட்டேன், ஆதாரம் தரமாட்டேன் என்று சீமான் பேசி இருக்கிறார்.
திமுகவிற்கு எதிராக எத்தனை போராட்டங்களை சீமான் நடத்தி இருக்கிறார்? சீமானின் வீரமெல்லாம் மைக்கு முன்னாடி மட்டும். தொடர்ச்சியாய் பொய் பேசி சீமான் தமிழ்நாட்டில் அரசியல் செய்ய முடியாது. எனவே, இன்று சீமான் வீட்டை முற்றுகை இடுகிறோம். கோமியம் குறித்து ஐஐடி இயக்குனர் காமக்கோடி பேசியது முட்டாள்தனத்தின் வெளிப்பாடு. ஐஐடி பேராசிரியர் என்றால் அறிவாளி ஒன்றும் கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.
The post பெரியார் குறித்து அவதூறாக பேசிய சீமானை கண்டித்து இன்று முற்றுகை போராட்டம்: திருமுருகன் காந்தி பேட்டி appeared first on Dinakaran.