தேனி: தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள கள்ளிப்பட்டி அருகே திண்டுக்கல் பைபாஸ் சாலையைக் கடந்த தொழு மாடுகள் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் 18 மாடுகள் உயிரிழந்தன. 20க்கும் மேற்பட்ட மாடுகள் காயம் அடைந்தன. தேவாரம் பகுதியைச் சேர்ந்த சுருளிச்சாமி, நூற்றுக்கும் மேற்பட்ட நாட்டு இன மாடுகளை உரத்திற்காக தோட்டங்களில் தொழுவம் அமைத்து மேய்ச்சல் செய்து வருகிறார். அரசுப் பேருந்து ஓட்டுநரான அழகர்சாமி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெறுகிறது.
The post பெரியகுளம் அருகே புறவழிச்சாலையில் அரசுப் பேருந்து மோதியதில் 18 மாடுகள் உயிரிழப்பு appeared first on Dinakaran.