தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் நாகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வீடு கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இதில் கென்கொரெட்டி பகுதியை சேர்ந்த காமாட்சி மற்றும் அறிவுராஜ் ஆகிய இருவரும் வேலை செய்து கொண்டிருந்த போது வீட்டின் முன்பிருந்த படிக்கட்டு காமாட்சி மீது விழுந்து அவர் இடிபாடுகளில் சிக்கி கொண்டிருந்தார்.
கட்டிட இடிபாடுகளில் சிக்கிய கூலி தொழிலாளி காமாட்சியை மக்கள் மீட்க முயற்சி செய்த போது பெரிய அளவிலான இடிபாடு என்பதால் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் தொழிலாளர்களை மீட்க முயன்ற போது காமாட்சி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மீட்கப்பட்டவரின் உடல் பெரியகுளம் காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post பெரியகுளத்தில் வீடு கட்டுமான பணியின்போது சுவர் இடிந்து விபத்து: இடிபாடுகளில் சிக்கி தொழிலாளி பலி appeared first on Dinakaran.