பெரிய பங்களாவில் வாழ்வதற்காக அரசியலுக்கு வரவில்லை - அதிஷி

1 month ago 9

புதுடெல்லி,

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதாகி நிபந்தனை ஜாமினில் வெளியே வந்த டில்லி ஆம் ஆத்மி முன்னாள் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், கோர்ட் உத்தரவால் முதல் மந்திரி பதவியிலிருந்து விலகினார். கடந்த 21-ந்தேதி புதிய முதல் மந்திரியாக அதிஷி பதவிறே்றார்.

டெல்லி முதல்-மந்திரியின் அதிகாரப்பூர்வ பங்களாவான எண் 6, பிளாக்ஸ்டாப் சாலையில் உள்ளது. இங்கு கடந்த 6-ம் தேதி அதிஷி குடியேறினார். இந்நிலையில் நேற்று( அக்.,09) திடீரென அவரது உடமைகள் பொதுப்பணித்துறை அதிகாரிகளால் தூக்கி வெளியே வீசப்பட்டன. கட்டாயப்படுத்தி அரசு பங்களாவிலிருந்து வெளியேற்றப்பட்டார். இதன் பின்னணியில் துணை நிலை கவர்னரும், பா.ஜ.க.வும் இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி முதல் மந்திரி அதிஷி கூறும்போது, ஆப்ரேஷன் தாமரையை துவங்கிய பா.ஜ.க., எங்களை அரசியல் ரீதியாக தோற்கடிக்க முடியாததால் மிகுந்த கவலையில் உள்ளது. இப்போது முதல்வர் இல்லத்தையும் பா.ஜ.க.வினர் ஆக்கிரமிப்பு செய்ய துவங்கியுள்ளனர். சொகுசு காரில் செல்வதற்கும், அரசு பங்களாவில் வாழ்வதற்காகவும் நாங்கள் அரசியலுக்கு வரவில்லை. தேவைப்பட்டால் சாலையோரம் அமர்ந்தும் ஆட்சி செய்வோம். மக்கள் மனதில் நாங்கள் உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

 

Read Entire Article