பெரிய கடை வீதியில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

2 weeks ago 5

திருப்பூர் : திருப்பூர் மாநகரில் உள்ள 60 வார்டு பகுதிகளுக்கும் 3 மற்றும் 4வது குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையத்தில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து சப்ளை செய்யப்படுவதில் அவ்வப்போது குழாய்களில் உடைப்பு ஏற்படுவது வழக்கம். உடனடியாக மாநகராட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் சரி செய்து குடிநீர் விநியோகத்தை சீர் செய்து விடுவர்.

ஆனால், திருப்பூர் பெரிய கடை வீதியில் பெரிய பள்ளி வாசல் மற்றும் பழனியம்மாள் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு இடையில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாகவே அதிலிருந்து தண்ணீர் வெளியாவதால் அப்பகுதியில் பள்ளம் ஏற்பட்டு அதில் தண்ணீர் தேங்கி நிற்பதால் அவ்வழியே செல்லும் பள்ளி மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

மேலும் குறுகலான அப்பகுதியில் ஏற்பட்டுள்ள பள்ளத்தால் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. தொடர்ந்து தண்ணீரும் கசிந்து சாலையில் தேங்கி நிற்பதால் விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாகவும், தண்ணீர் வீனாவதை தடுத்திடும் வகையில் அப்பகுதியில் உடனடியாக சீரமைப்பு பணியை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

The post பெரிய கடை வீதியில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர் appeared first on Dinakaran.

Read Entire Article