பெரம்பலூர் மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள்

1 month ago 6

பெரம்பலூர், டிச. 6: பெரம்பலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பெரம்பலூர் ஒன்றியம், கோனேரிப்பாளையம் ஊராட்சியில் பெரம்பலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் மேற் கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்டக் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் நேற்று பார்வையிட்டார். பெரம்பலூர் மாவட்டத்தில் கிராமப்புற வளர்ச்சிகளுக்கு மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறையின் சார்பில் பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்தப்பணிகளின் முன்னேற்ற நிலை, தரம், திட்டப் பணிகள் திட்ட மதிப்பீட்டில் உள்ளவாறு மேற்கொள்ளப்பட்டு வருகிறதா என்பது குறித்து மாவட்ட கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். அதன்படி, பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோனேரிப்பாளையம் ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீட்டின் பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென தெரிவித்தார். தொடர்ந்து, பிரதம மந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 2.16 கோடி மதிப்பீட்டில் கோனேரிப்பாளையம் முதல் எளம்பலூர் சாலை வரை நடைபெறும் புதிய தார்ச்சாலை அமைக்கும் பணியில் சிறுபாலங்கள் மற்றும் சாலை ஆகியவற்றை, திட்ட மதிப்பீட்டில் உள்ளவாறு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பது குறித்து கலெக்டர் அளவீடு செய்தார்.

இந்த ஆய்வுகளின் போது, பெரம்பலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வகுமார் (கி.ஊ), பூங்கொடி (வ.ஊ), ஒன்றிய உதவிப்பொறியாளர் சேவு, பணி மேற்பார்வையாளர் தண்டபாணி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் கள் உடனிருந்தனர்.

The post பெரம்பலூர் மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள் appeared first on Dinakaran.

Read Entire Article