பெரம்பலூர் மாவட்டத்தில் கல்லாற்றின் குறுக்கே மேலும் ஒரு தடுப்பணை கட்ட 6.50 கோடி ஆகும் என்று மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது: அமைச்சர் துரைமுருகன் தகவல்

1 day ago 2

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பெரம்பலூர் எம்எல்ஏ ம.பிரபாகரன்(திமுக) பேசுகையில் “ பெரம்பலூர் மாவட்டம், மலையாளப்பட்டி கிராமத்தில் சின்னமுட்டலுவில் நீர் தேக்கம் அமைக்க அரசு முன்வருமா” என்றார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் நீர்வளத்துறை துரைமுருகன் பேசுகையில், “ இந்த திட்டம் தொடர்பாக 2017,2018 மற்றும் 2019 ம் ஆண்டுகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த பகுதியில் நிலமட்டத்தின் கீழே 12 மீட்டர் ஆழம் வரை கூழாங்கற்கல் மண் கலந்து காணப்படுகின்றன. அதற்கு கீழே சிதைவுற்ற மணல் காணப்படுகிறது.

எனவே இந்த இடத்தில் நீர் தேக்கம் சாத்தியக் கூறு இல்லை” என்றார். பிரபாகரன்:பெரம்பலூர் மாவட்டத்தில் கல்லாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட அரசு நடவடிக்கை எடுக்கபடுமா: துரைமுருகன்: கல்லாற்றின் குறுக்கே 6.50 கோடி ஆகும் என்று மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது. எனவே நிதி நிலைக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு விவாதம் நடந்தது.

The post பெரம்பலூர் மாவட்டத்தில் கல்லாற்றின் குறுக்கே மேலும் ஒரு தடுப்பணை கட்ட 6.50 கோடி ஆகும் என்று மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது: அமைச்சர் துரைமுருகன் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article