பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் 108 சங்காபிஷேகம்

1 month ago 5

 

பெரம்பலூர்,நவ.19: பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவிலில் சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. பெரம்பலூர் நகராட்சியில் துறையூர் சாலையிலுள்ள  அகிலாண்டேஸ்வரி சமேத  பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவிலில் நேற்று (18ஆம்தேதி)கார்த்திகை மாதத்தின் முதல் திங்கட் கிழமை, சோமவாரத்தை முன்னிட்டு காலை 10 மணி அளவில் 108 சங்காபிஷேகம் பூஜை ஆரம்பமானது. யாகசாலையுடன் தொடங்கி வேத மந்திரங்கள் முழங்க மங்கள வாத்தியத்துடன் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

முன்னதாக அம்பாள் மற்றும் ஈசனுக்கு பால், தயிர், சந்தனம், பழ வகைகளுடன் அபிஷேகம் முடித்து பாராயணம் செய்த சங்குகளை பொதுமக்கள் கைகளினால் கோவிலை வலம்வந்து சிவாச்சாரியார் வசம் ஒப்படைத்தனர்.பகல் 12:30 மணியளவில் மகா அபிஷேகம் நடை பெற்றது. பின்பு மகா தீபாராதனை காண்பித்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பூஜைகளை கௌரி சங்கர் சிவாச்சாரியார், முல்லை சிவாச்சாரியார் ஆகியோர் செய்திருந்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் கோவிந் தராஜன் செய்திருந்தார்.சங்காபிஷேகத்தை காண பெரம்பலூர், துறைமங்க லம், அரணாரை, எளம்ப லூர், விளாமுத்தூர், நெடுவாசல் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

The post பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் 108 சங்காபிஷேகம் appeared first on Dinakaran.

Read Entire Article