பெரம்பலூர் சிவன் கோவிலில் சோமவார பிரதோஷம்

3 months ago 11

பெரம்பலூர், பிப்.12: பெரம்பலூர் சிவன் கோவிலில் சோமவார பிரதோஷத்தை முன்னிட்டு ஈசன் மற்றும் அதிகார நந்திக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பெரம்பலூர் நகராட்சியில் துறையூர் சாலையில் அமைந்துள்ள  அகிலாண்டேஸ்வரி சமேத  பிரம்மபுரீஸ்வரர் திருக் கோவிலில் நேற்று சோமவார பிரதோஷத்தை முன்னிட்டு மாலை 6 மணி அளவில் ஈசன் மற்றும் அதிகார நந்திக்கு பால், தயிர், சந்தனம், பழ வகைகளுடன் சிறப்பு அபிஷேகம் முடித்து மகா தீபாராதனை காண்பித்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

ஈசன் ரிஷப வாகனத்தில் கோவிலில் உட்பிரகாரம் மூன்று முறை வலம்வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நிகழ்ச்சியில் முன்னாள் அறங்காவலர் வைத்தீஸ்வரன், தின, வார வழிபாட்டுக் குழுவினர் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஈசன் அருள் பெற்றனர். பூஜை களை முல்லை சிவாச்சா ரியார் செய்து வைத்தார்.

The post பெரம்பலூர் சிவன் கோவிலில் சோமவார பிரதோஷம் appeared first on Dinakaran.

Read Entire Article