பெரம்பலூர், ஜன.30: பெரம்பலூர் மாவட்ட எஸ்பி அலுவலக வளாகத்தில் எஸ்பி ஆதர்ஷ் பசேரா தலைமையில் நேற்று சிறப்பு மனு முகாம் நடை பெற்றது. இந்த சிறப்பு மனு முகாமில் கலந்து கொண்ட மாவட்ட எஸ்பி பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றார். மேலும், இந்த சிறப்பு மனு முகாமில் பெரம்பலூர் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி காமராஜ் மற்றும் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர், பாடாலூர், குன்னம், மங்களமேடு, அரும்பாவூர், கை.களத்தூர், வி.களத்தூர், மருவத்தூர், பெரம்பலூர் மற்றும் மங்களமேடு அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு, மாவட்ட குற்றப் பிரிவு உள்ளிட்ட அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் சிறப்பு பிரிவு காவல் நிலையங்களைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர்கள் சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர். இந்த சிறப்பு மனு முகாம் மூலம் 20 மனுக்கள் பெறப் பட்டு சம்மந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் பேசிய பெரம்பலூர் மாவட்டஎஸ்பி, ஒவ்வொரு வாரமும் புதன் கிழமை, மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் இதுபோல் சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெறும் எனவும் பொது மக்கள் இந்த சிறப்பு முகாமினை பயன்படுத்திக் கொள்ளுமாறும், சிறப்பு மனு விசாரணை முகாமில் கலந்து கொள்ள வருபவர் கள் மாவட்ட எஸ்பி அலுவ லகம் வருவதற்கு ஏதுவாக மாவட்ட காவல்துறை சார் பாக பாலக்கரையிலிருந்து மாவட்ட எஸ்பி அலுவலகத் திற்கும், மீண்டும் எஸ்பி அலுவலகத்திலிருந்து புதியபேருந்து நிலையம் செல்ல பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
The post பெரம்பலூர் எஸ்பி அலுவலகத்தில் எஸ்பி மக்களிடம் மனுக்களை பெற்றார் appeared first on Dinakaran.