பெரம்பலூர் / அரியலூர் பிலிமிசை அரசு பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா பாட புத்தகம்

1 month ago 9

 

பாடாலூர், அக், 9: ஆலத்தூர் தாலுகா பிலிமிசை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் இரண்டாம் பருவ விலையில்லா பாட புத்தகங்கள் நேற்று முன்தினம் வழங்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் காலாண்டு தேர்வு விடுமுறைக்கு பின் நேற்று முன்தினம் பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவ-மாணவிகள் வழக்கமான உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்தனர். பள்ளி திறக்கப்பட்ட முதல் நாளில் 1 ம் வகுப்பு முதல் 8 ம் வரை பள்ளி மாணவர்களுக்கு இரண்டாம் பருவத்திற்கான விலையில்லா பாடப் புத்தகங்கள், பாடத்திற்கான குறிப்பேடுகள், எண்ணும் எழுத்தும் பயிற்சி ஏடுகள் ஆகியவை வழங்கப்பட்டது. இதனை மாணவ- மாணவிகள் உற்சாகத்துடன் பெற்றுக் கொண்டனர். இந்நிகழ்வில் பள்ளித் தலைமையாசிரியர் அமிர்தம், பள்ளி ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் ஆகியோர் உடனிருந்தனர்.

 

 

The post பெரம்பலூர் / அரியலூர் பிலிமிசை அரசு பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா பாட புத்தகம் appeared first on Dinakaran.

Read Entire Article