பெரம்பலூர்,பிப்.12: பெரம்பலூர் துறை மங்கலத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் 24 வது அகில இந்திய மாநாட்டு வரவேற்புக் குழு அமைப்புக் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் செல்ல துரை, அகஸ்டின், கலையரசி, ரெங்கநாதன், ராஜேந்திரன், டாக்டர் கருணாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக மாநிலக் குழு உறுப்பினர் சாமி நடராஜன் கலந்து கொண்டு மாநாடு நடை பெறுவது குறித்தும், வரவேற்பு குழு அமைப்பது குறித்து பேசினார்.
கூட்டத்தில், மாவட்டக்குழு உறுப்பினர்கள் கருணா நிதி, கோகுல கிருஷ்ணன், மகேஸ்வரி, கிருஷ்ண மூர்த்தி, எட்வின், ராம கிருஷ்ணன், நகரச் செயலாளர் இன்பராஜ், ஒன்றிய செயலாளர்கள் பெரியசாமி, செல்லமுத்து, பாஸ்கரன், சக்திவேல், மின்னரங்கம் செயலாளர் பாலகிருஷ்ணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
The post பெரம்பலூரில் மா.கம்யூ., கூட்டம் appeared first on Dinakaran.